செய்திகள்

தோனியின் பேட்டிங் குறித்து நாள்தோறும் கேள்வி எழுப்புவது வியப்பைத் தருகிறது: சஞ்சய் பாங்கர்

2nd Jul 2019 01:06 AM

ADVERTISEMENT


தோனியின் பேட்டிங் குறித்து நாள்தோறும் கேள்வி எழுப்புவது வியப்பைத் தருகிறது என இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மந்தமான பேட்டிங் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாங்கர் கூறியதாவது: தோனி 31 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். ஆனால் கடைசி ஓவர்களில் அவர் மெத்தனமாக ஆடினார் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது வியப்பை ஏற்படுத்துகிறது. அவர் தனது அணிக்காக திறமையுடன் ஆடி வருகிறார். அவரது பேட்டிங் நோக்கம் குறித்து நாங்கள் திருப்தியாக உள்ளோம்.
ஆப்கன் உடனான ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் தோனி சிறப்பாகவே ஆடியுள்ளார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுடன் வெற்றியில் தோனி முக்கிய பங்கு வகித்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பிட்சின் தன்மையை நன்கு பயன்படுத்தி தலைவலியை உண்டாக்கினர் .
 

ADVERTISEMENT
ADVERTISEMENT