வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

சிஎஸ்கே வீரர்களின் கோபத்தின் விளைவினால்தான் ஐபிஎல் கோப்பையை வென்றோம்:  என் சீனிவாசன்

By எழில்| DIN | Published: 17th January 2019 11:49 AM

 

சிஎஸ்கே வீரர்கள் யாரும் தவறு செய்யவில்லை. சிஎஸ்கே அணிக்குக் கிடைத்த தண்டனை நியாயமானது அல்ல என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கிய நிலையில் 2018- ஐபிஎல் சீசனில் பங்கேற்ற சென்னை 7-வது முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஏற்கெனவே 2010, 2011-ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் பேட்டியளித்தபோது கூறியதாவது:

சிஎஸ்கேவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஸ்பாட் ஃபிக்ஸிங் சமயத்தின்போதுகூட நான் பதவியிலிருந்து இறங்கி டால்மியாவைப் பொறுப்பு ஏற்கும்படி கூறினேன். நான் நியாயமான விதத்தில் நடத்தப்பட்டேனா என்று என்னிடம் கேட்டால், இல்லை என்றுதான் சொல்வேன். இதெல்லாம் கடந்தகாலச் சம்பவங்கள். கிரிக்கெட்டுக்கு நான் அளித்து வரும் ஆதரவு இன்னமும் மாறவில்லை.

சிஎஸ்கே வீரர்கள் யாரும் தவறு செய்யவில்லை. சிஎஸ்கே அணிக்குக் கிடைத்த தண்டனை நியாயமானது அல்ல. இதுபோன்று நடத்தப்பட்டதால் சிஎஸ்கே வீரர்களிடையே உண்டான கோபத்தின் விளைவினால்தான் கடந்த வருடம் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றது. தாங்கள் சிறந்த வீரர்கள் என்பதை நிரூபிக்க அவர்கள் முயன்றார்கள் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Chennai Super Kings N Srinivasan IPL 2018 title

More from the section

8-ஆவது தோல்வியா, 2-ஆவது வெற்றியா? பெங்களூரு அணி தவிப்பு
வார்னர்-பேர்ஸ்டோவ் இணை அற்புதமாக ஆடினர்: கேன் வில்லியம்ஸன்
ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்
சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் லிவர்பூல்-பார்சிலோனா, அஜாக்ஸ்-டாட்டன்ஹாம் மோதல்
விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி