செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

3-வது ஒருநாள்: அணித் தேர்வில் திடீரென இரு மாற்றங்களைச் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி!

By எழில்| DIN | Published: 17th January 2019 10:47 AM

 

டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. அடுத்ததாக, ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றுவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு அதைவிடவும் பெரிய சங்கடம் எதுவுமில்லை. மெல்போர்னில் மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. 

இதனால் கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரென்டாஃப் காயம் காரணமாக விலகியுள்ளார். நாதன் லயன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்விருவர்களுக்குப் பதிலாக ஆடம் ஸம்பாவும் பில்லி ஸ்டேன்லேக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மேலும் முன்னேற்பாடாக, வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் அணிக்குத் தேர்வாகியுள்ளார். இந்த மாற்றங்களின்மூலம் கடைசி ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரையும் வெல்ல ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது. கடைசியாக விளையாடிய 23 ஒருநாள் ஆட்டங்களில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே ஆஸி.  அணி வென்றுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Adam Zampa Billy Stanlake USvIND ODI

More from the section

காயத்திலிருந்து எப்போது மீள்வேன் எனத் தெரியாது: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை
உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்தின் சாதனைகள்
மே.இ.தீவுகள் தொடருக்கான  இந்திய அணி தேர்வு: 19-இல் நடக்கிறது
ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணியில் பும்ரா, ரோஹித் சேர்ப்பு: கோலிக்கு இடமில்லை