வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

மலேசிய பாட்மிண்டன்: ஸ்ரீகாந்த், காஷ்யப், சாய்னா வெற்றி

DIN | Published: 17th January 2019 01:00 AM


மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபல்லி காஷ்யப், சாய்னா நேவால் ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால் 14-21, 21-18, 21-18 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் டெங் ஸ்வானை வீழ்த்தி இரண்டாம் சுற்றக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-11 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீரர் ஆக்நஸ் காவை வென்றார்.
பாருபல்லி காஷ்யப் 19-21, 21-9, 21-10 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 21-19, 21-17 என நெதர்லாந்தின் ராபின்-செலனா இணையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

8-ஆவது தோல்வியா, 2-ஆவது வெற்றியா? பெங்களூரு அணி தவிப்பு
வார்னர்-பேர்ஸ்டோவ் இணை அற்புதமாக ஆடினர்: கேன் வில்லியம்ஸன்
ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்
சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் லிவர்பூல்-பார்சிலோனா, அஜாக்ஸ்-டாட்டன்ஹாம் மோதல்
விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி