வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

DIN | Published: 17th January 2019 12:57 AM


சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரக்கியானந்தாவின் சாதனைûயும் அவர் முறியடித்தார்.
தில்லியில் நடைபெறும் 17-ஆவது தில்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சக வீரர் டிகே.சரமாவை தோல்வியுறச் செய்து இந்த சிறப்பைப் பெற்றார். குகேஷுக்கு தற்போது வயது 12 ஆண்டுகள், 7 மாதங்கள் 17 நாள்கள் ஆகும்.
கடந்த 2002-இல் உக்ரைனின் செர்ஜி கார்ஜகின் தனது 12 ஆண்டுகள், 7 மாதங்களில் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையைப் பெற்றார். சென்னையின் மற்றொரு வீரர் பிரகனந்தா 12 ஆண்டுகள், 10மாதங்களில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றார்.
இதுதொடர்பாக குகேஷ் கூறுகையில்-செஸ் ஜாம்பவான்கள் பாபி பிஷர், விஸ்வநாதன் ஆனந்தை எனது முன்னோடிகளாக கொண்டுள்ளேன் இந்த சாதனையை படைத்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

8-ஆவது தோல்வியா, 2-ஆவது வெற்றியா? பெங்களூரு அணி தவிப்பு
வார்னர்-பேர்ஸ்டோவ் இணை அற்புதமாக ஆடினர்: கேன் வில்லியம்ஸன்
ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்
சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் லிவர்பூல்-பார்சிலோனா, அஜாக்ஸ்-டாட்டன்ஹாம் மோதல்
விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி