வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

DIN | Published: 17th January 2019 02:56 AM


இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸி. சுற்றுப்பயணம் முடிந்ததும், இந்திய அணி 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. கிரிக்கெட் நியூஸிலாந்து அமைப்பு இதற்காக காலின் டி கிராண்ட்ஹோம், டாம் லத்தம், மிச்செல் சான்டெரை திரும்ப அழைத்துள்ளது.
முதல் 3 ஆட்டங்களுக்கான 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகவும், இந்தியாவுடன் பிரம்மாண்டமான இந்த தொடர்களை வெல்லவும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
அணி விவரம்: கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டிரென்ட் பெளல்ட், டக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஸன், மார்ட்டின் கப்டில்,, மேட் ஹென்றி, டாம் லத்தம், காலின் மன்றோ, ஹென்றி நிக்கோல்ஸ், மிச்செல் சான்டெர், ஐஷ் சோதி, டிம் செளதி, ராஸ் டெய்லர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

8-ஆவது தோல்வியா, 2-ஆவது வெற்றியா? பெங்களூரு அணி தவிப்பு
வார்னர்-பேர்ஸ்டோவ் இணை அற்புதமாக ஆடினர்: கேன் வில்லியம்ஸன்
ஐபிஎல் போட்டியில் மீண்டும் கவனம்: தினேஷ் கார்த்திக்
சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் லிவர்பூல்-பார்சிலோனா, அஜாக்ஸ்-டாட்டன்ஹாம் மோதல்
விஸ்வாசமே அதிக முக்கியத்துவம் பெறும்: விராட் கோலி