சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா, பேயர்ன் முனிக் ஆட்டங்கள் டிரா

சாம்பியன்ஸ் லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பார்சிலோனா-லியான், பேயர்ன் முனிக்-லிவர்பூல் அணிகள்
எதிரணி வீரர்களிடம் பந்தை தட்டிச் செல்லும் மெஸ்ஸி.
எதிரணி வீரர்களிடம் பந்தை தட்டிச் செல்லும் மெஸ்ஸி.


சாம்பியன்ஸ் லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பார்சிலோனா-லியான், பேயர்ன் முனிக்-லிவர்பூல் அணிகள் இடையிலான ரவுண்ட் 16 சுற்று  ஆட்டங்கள் கோலின்றி டிராவில் முடிந்தன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைபப்பு சார்பில் நடத்தப்படும் பிரதான போட்டி சாம்பியன்ஸ் லீக் ஆகும். இதில் பிரபல கால்பந்து அணிகள் தொடக்க சுற்று ஆட்டங்களில் விளையாடி முடிந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் 16 சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.
லீவர்பூல்-பேயர்ன் முனிக் இடையே நடைபெற்ற ஆட்டம் விறுவிறுப்பின்றி இருந்தது. ஆட்டம் தொடங்கி 45-ஆவது நிமிடத்தில் சாடியோ மேன் கோலடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முக்கிய நட்சத்திர வீரர்கள் வேன் ஜிக், ஜோ கோம்ஸ், டேஜான் ஆகியோர் இல்லாததால் லிவர்பூல் அணி திணறியது. அதன் மற்றொரு வீரரான முகமது சலாவும் அடித்த கோல் வாய்ப்பும் வீணாகியது. இறுதியில் ஆட்டம் 0-0 என கோலின்றி முடிந்தது.
பார்சிலோனோ-லியான்
அதே போல் பார்சிலோனோ-லியான் அணிகள் மோதிய ஆட்டமும் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது. பலம் வாய்ந்த பார்சிலோனா அணிக்கு கோலடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் வீணாக்கப்பட்டது. லூயிஸ் ஸ்வாரஸ் இரண்டாம் பாதியில் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்து வெளியே சென்று விட்டது. வெளி மைதானங்களில் நடைபெற்ற 6 ஆட்டங்களில் இதுவரை ஒன்றில் கூட பார்சிலோனா வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட ஆட்டம் மார்ச் 13-இல் கேம்ப் நெளவில் நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com