கணுக்கால் காயம்: இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்மன்ப்ரீத் கெளர் விலகல்

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணியுடன் நடக்கவுள்ள ஒருநாள், டி20 தொடர்களில் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீத்
கணுக்கால் காயம்: இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்மன்ப்ரீத் கெளர் விலகல்


கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணியுடன் நடக்கவுள்ள ஒருநாள், டி20 தொடர்களில் நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இங்கிலாந்து அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றுள்ளது. 
முதல் ஒருநாள் ஆட்டம் மும்பையில் 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஹர்மன்ப்ரீத் கெளர் கணுக்காலில் காயமடைந்துள்ளார்.
இதனால் 2 தொடர்களிலும் அவரால் ஆட முடியாத நிலை உள்ளது. டி20 தொடரில் அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தானா கேப்டனாக செயல்படுவார். 
ஹர்மன்ப்ரீத் கெளருக்கு பதிலாக ஹிமாச்சல் பிரதேசத்தின் ஹர்லீன் தியோல் இடம் பெறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com