மெஸ்ஸியின் கோலால் வென்றது பார்சிலோனா

ஸ்பெயின் லா லிகா கால்பந்து ஆட்டத்தின் ஒரு பகுதியாக ரியல் வல்லாடோலிட் அணியை மெஸ்ஸியின் ஓரே கோலால் வீழ்த்தியது பார்சிலோனா.
மெஸ்ஸியின் கோலால் வென்றது பார்சிலோனா

ஸ்பெயின் லா லிகா கால்பந்து ஆட்டத்தின் ஒரு பகுதியாக ரியல் வல்லாடோலிட் அணியை மெஸ்ஸியின் ஓரே கோலால் வீழ்த்தியது பார்சிலோனா.
 லா லிகா நடப்பு சாம்பியன் பார்சிலோனா தொடர்ந்து ஆடிய 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. இந்நிலையில் வலுகுறைந்த ரியல்வல்லாடோலிட் அணியுடன் கேம்ப் நெள மைதானத்தில் மோதியது பார்சிலோனா.
 தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இந்நிலையில் முதல்பாதி நிறைவடையும்போது, கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இதன் மூலம் 1-0 என வெற்றி பெற்றது பார்சிலோனா. சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் 16 சுற்றுக்கு இந்த வெற்றி உத்வேகம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com