தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: இறுதிச் சுற்றில் ரயில்வே-ம.பி. மோதல்

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரயில்வேயும்-மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரயில்வேயும்-மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.
 ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன.
 முதல் ஆட்டத்தில் ரயில்வே அணி 8-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் ஹரியாணா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. மற்றொரு அரையிறுதியில் ம.பி. 2-1 என்ற கோல் கணக்கில் போராடி மகாராஷ்டிராவை வென்றது. ரயில்வே அணியில் பல்வேறு இந்திய வீராங்கனைகளான வந்தனா கட்டாரியா, அனுபா பர்லா, நவ்ஜோத் கெளர், தீப் கிரேஸ், நேஹா ஆகியோர் இடம்
 பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com