இன்று இங்கிலாந்து-போர்ட் பிரசிடென்ட் லெவன் மகளிர் அணிகள் பயிற்சி ஆட்டம்

இங்கிலாந்து மற்றும் போர்ட் பிரசிடென்ட் லெவன் மகளிர் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இன்று இங்கிலாந்து-போர்ட் பிரசிடென்ட் லெவன் மகளிர் அணிகள் பயிற்சி ஆட்டம்

இங்கிலாந்து மற்றும் போர்ட் பிரசிடென்ட் லெவன் மகளிர் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் மும்பையில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
 ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்திய அணியுடன் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது இங்கிலாந்து.
 மும்பையில் வரும் 22, 25, 28-ஆம் தேதிகளில் ஒரு நாள் ஆட்டங்கள் நடக்கின்றன. இதற்கு தயாராகும் வகையில் மும்பை வாங்கடே மைதானத்தில் ஸ்மிருதி மந்தானா தலைமையிலான போர்ட் பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மோதுகிறது.
 நியூஸிலாந்து தொடரில் மந்தானா அபாரமாக ஆடினார். மேலும் ஆட்டத்தில் பொறுமையை கடைபிடிக்க அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார் தலைமை பயிற்சியாளர் டபிள்யு வி.ராமன். விக்கெட் கீப்பர் ஆர்.கல்பனாவுக்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவியாக அமையும்.
 அதே நேரத்தில் 50 ஓவர் ஆட்டங்களில் வலிமையாக உள்ள இங்கிலாந்து அணியில் டேமி பீமெளன்ட், ஹீதர் நைட், டேனி ஒயிட் போன்ற திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
 கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியாவை நொறுக்கி இருந்தது இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com