மெக்ராத்துக்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸி. பந்துவீச்சாளர்!

மெக்ராத்துக்குப் பிறகு 13 வருடங்கள் கழித்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸி. பந்துவீச்சாளர்!

கடந்த 13 வருடங்களில் வேறெந்த ஆஸி. நட்சத்திர பந்துவீச்சாளர்களாலும் நிகழ்த்த முடியாத சாதனையை...

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக ஆஸி. பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் காகிஸோ ரபாடாவைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளார். கடந்த 2006-ல் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் முதலிடத்தில் இருந்தார். அதன்பிறகு 13 வருடங்கள் கழித்து மற்றொரு ஆஸி. பந்துவீச்சாளர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். 

2006-ல் மெக்ராத் முதலிடம் பிடித்த பிறகு 2009-ல் மிட்செல் ஜான்சன் இரண்டாமிடம் பிடித்தார். இதனால் கடந்த 13 வருடங்களில் வேறெந்த ஆஸி. நட்சத்திர பந்துவீச்சாளர்களாலும் நிகழ்த்த முடியாத சாதனையை கம்மின்ஸ் நிகழ்த்தியுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

1. பேட் கம்மின்ஸ்
2. ஜிம்மி ஆண்டர்சன்
3. ககிஸோ  ரபாடா
4. வெர்னான் பிளாண்டர்
5. ஜடேஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com