தேசிய சீனியர் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் சாய்னா-சிந்து மோதல்

தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் சாய்னாவும்-பி.வி.சிந்துவும் மோதுகின்றனர்.
தேசிய சீனியர் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் சாய்னா-சிந்து மோதல்


தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் சாய்னாவும்-பி.வி.சிந்துவும் மோதுகின்றனர்.
குவாஹாட்டியில் 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை பி.வி.சிந்துவும்-அஸ்ஸாமின் இளம் நட்சத்திரம் அஸ்மிதா சாஹ்லியாவும் மோதினர். முதல் கேமை 21-10 என சிந்து எளிதாக கைப்பற்றினார். ஆனால் இரண்டாவது கேமில் அஸ்மிதா அதிரடியாக ஆடியதால் சிந்து சிரமப்பட்டார். இதில் 19-16 என அஸ்மிதாதான் பெற்ற முன்னிலையை தக்க வைக்க முடியவில்லை. இறுதியில் 22-20 என சிந்து வென்று இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் சாய்னா 21-15, 21-14 என்ற கேம் கணக்கில் வைஷ்ணவி பாலேவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் இருவரும் மோதுகின்றனர்.
ஆடவர்: லக்ஷயா சென் -சௌரவ் வர்மா மோதல்
ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென் 21-15, 21-16 என்ற கேம் கணக்கில் மூத்த வீரர் பாருபல்லி காஷ்யப்பை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரணீத்தை 21-11, 21-23, 21-18 என்ற கேம் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார் செளரவ் வர்மா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com