மின்வாரிய பெண் ஊழியர்களுக்கான போட்டி: குஜராத் சாம்பியன்

ஈரோட்டில் நடைபெற்ற அகில இந்திய மின்வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் குவித்த குஜராத் அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

ஈரோட்டில் நடைபெற்ற அகில இந்திய மின்வாரிய பெண் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் குவித்த குஜராத் அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
 ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளி வளாகத்தில், அகில இந்திய மின் வாரியங்களுக்கு இடையிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 7 முதல் 10 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.
 இதில், கேரம், டென்னிகாய்ட், செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஆந்திரம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் மின்வாரியங்களைச் சேர்ந்த சுமார் 320 விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
 இதில் கேரம், டென்னிகாய்ட் விளையாட்டுகளில் தமிழ்நாடு மின்வாரிய அணியும், செஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் குஜராத் மின்வாரிய அணியும், பாட்மிண்டன் (ஷட்டில்) போட்டியில் கர்நாடக மின்வாரிய அணியும் முதலிடம் பிடித்தன. இதில், அதிகப் புள்ளிகள் எடுத்த குஜராத் மின்வாரிய அணி சாம்பியன் கோப்பையைப் பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாடு மின்வாரிய அணியும் , மூன்றாமிடத்தை ஆந்திர மின்வாரிய அணியும் கைப்பற்றின.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிர்மானக் கழக இயக்குநர் மு.சந்திரசேகர் வரவேற்றார். இதில் பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி சிறப்புரை ஆற்றினார்.
 பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கினர்.
 இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, விளையாட்டு அலுவலர் சிவகுமார், மின்வாரிய தலைமைப் பொறியாளர் செ.சாந்தி, தலைமைப் பொறியாளர்(பணியமைப்பு) ஆ. அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com