மகளிர் டி20: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூஸி.

இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி நியூஸிலாந்து ஒயிட்வாஷ் செய்தது.
மகளிர் டி20: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூஸி.

இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 தொடரை 3-0 என கைப்பற்றி நியூஸிலாந்து ஒயிட்வாஷ் செய்தது.
 ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றி இருந்த நிலையில் டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதலிரண்டு ஆட்டங்களில் நியூஸி. அணி வென்றது.
 கடைசி ஆட்டம் ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளில் சூஸி பேட்ஸ் 5 பவுண்டரியுடன் 24 ரன்களுக்கு அவுட்டானார். அவருக்கு பின் ஹன்னா ரோவ் 12 ரன்களுக்கு வெளியேறினார்.
 சோபி டிவைன் அபாரம்: அதிரடியாக ஆடி வந்த சோபி டிவைன் 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 72 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவருக்கு பின் கேப்டன் ஏமி சேட்டர்வெயிட் மட்டுமே நிலைத்து ஆடி 31 ரன்களை விளாசி அவுட்டானார்.
 அவருக்கு பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர்.
 17-ஆவது ஓவரில் 140/2 என வலுவான நிலையில் இருந்த நியூஸி. கடைசியில் 21 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
 இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது நியூஸி. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 2, மான்சி, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 வீணானது மந்தானாவின் அதிரடி ஆட்டம்: 162 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்தியா தரப்பில் பிரியா புனியா, ஸ்மிருதி மந்தானா களமிறங்கினர். பிரியா 1, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெüர் 2, ரன்களுடன் அவுட்டாயினர். 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 86ரன்களை விளாசிய மந்தானா, டிவைன் பந்துவீச்சில் அவுட்டானார்.
 மிதாலி ராஜ் 24, தீப்தி சர்மா 21 ரன்களுடன் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர். கஸ்பெரக் வீசிய கடைசி பந்தில் மிதாலி ராஜால் பவுண்டரி அடிக்க முடியாததால் தோல்வி அடைந்தது இந்தியா.
 இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது இந்தியா. நியூஸி. தரப்பில் சோபி 2-21, அமெலியா கெர், கஸ்பெரக் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருதுகளை சோபி டிவைன் வென்றார். 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து தொடரையும் 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com