விஜய் ஷங்கர் அதிரடி: கடின இலக்கை துரத்தி வரும் இந்தியா

நியூஸிலாந்து 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார். 
விஜய் ஷங்கர் அதிரடி: கடின இலக்கை துரத்தி வரும் இந்தியா

இந்தியா, நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் ஹாமில்டனில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

ஏற்கெனவே இந்திய அணி ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றிய நிலையில், அதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

முதல் ஆட்டத்தில் நியூஸி. 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தற்போது 1-1 என தொடர் சமனில் உள்ளது.

இந்நிலையில், 3-ஆவது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் விளாசினார். க்ருணால் பாண்டியா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

213 என்ற கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் ஷங்கர் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com