தேசிய சீனியர் ஹாக்கி: பஞ்சாப்- ரயில்வே மோதல்

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (டிவிஷன் ஏ) பிரிவு சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்-ரயில்வே அணிகள் மோதுகின்றன.
தேசிய சீனியர் ஹாக்கி: பஞ்சாப்- ரயில்வே மோதல்

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி (டிவிஷன் ஏ) பிரிவு சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்-ரயில்வே அணிகள் மோதுகின்றன.
 சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அன்ட் சிந்து வங்கியை வீழ்த்தியது.
 மற்றொரு அரையிறுதியில் ரயில்வே அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியை வென்றது.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ரயில்வே-பஞ்சாப்பும், மூன்று மற்றும் நான்காவது இடத்துக்கான ஆட்டத்தில் பெட்ரோலியம்-பஞ்சாப் சிந்து வங்கியும் மோதுகின்றன.
 தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி:
 ஹிஸாரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரயில்வே அணி 8-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸாவை நொறுக்கியது. ராஜஸ்தான் 5-1 என கூர்க்கை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
 பி பிரிவில் ம.பி. 3-0 என கங்பூர்-ஒடிஸாவையும், சத்தீஸ்கர் 1-0 என போபாலையும், டி பிரிவில் ஜார்க்கண்ட் 7-0 என தமிழகத்தையும், வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com