துளிகள்...

அஸ்டானாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில் கொரியாவிடம் 1-2 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்று இந்தியா 4-ஆம் இடத்தையே பெற முடிந்தது.

*அஸ்டானாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெடரேஷன் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில் கொரியாவிடம் 1-2 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்று இந்தியா 4-ஆம் இடத்தையே பெற முடிந்தது.
 *இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக மும்பையில் நடக்கவுள்ள மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மிதாலி ராஜ் (கேப்டன்), ஜூலன் கோஸ்வாமி, ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கெளர், தீப்தி சர்மா, தனியா பாட்டியா, கல்பனா, மோனா மேஷ்ராம், ஏக்தா பிஷ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, மான்ஸி ஜோஷி, பூனம் ரவுட்.
 *வயநாட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆதிக்கம் செலுத்தியது. இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்ஸில் 340 ரன்களை எடுத்தது. இந்திய ஏ அணிக்கு பதிலடியாக 540/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
 *இந்தூரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஸ்னூக்கர் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு பங்கஜ் அத்வானி தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் ரயில்வேயின் கமல் சாவ்லாவை 5-2 என வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com