ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு

வரும் மே. ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்புள்ளது என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்துக்கு வாய்ப்பு

வரும் மே. ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு வாய்ப்புள்ளது என சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
 சென்னையில் நடைபெற்ற டி15 கிரிக்கெட் லீக் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது-
 உலகக் கோப்பை போட்டிக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இந்தியா அல்லது இங்கிலாந்துக்கு பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
 ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது.
 டி20, டி10 ஆட்டங்களால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா எனக் கேட்டபோது அவர் கூறுகையில்-
 டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களுக்கு குறுகிய கால ஆட்டமுறைகளால் எந்த பாதிப்பும் இல்லை. பொதுமக்கள், ரசிகர்கள் தற்போது டி20, டி10 போன்றவற்றுக்கு அதிக வரவேற்பு தந்து வருகின்றனர்.
 எனக்கு பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக மாறும் எண்ணமில்லை. ஐபிஎல் உள்பட வேறு சில பணிகள் உள்ளன.
 இலங்கை கிரிக்கெட் நிலை-கவலை தருகிறது
 கேப்டன் சண்டிமால் நீக்கத்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை. ஆனால் இலங்கையில் கிரிக்கெட் நிலை கவலை தருகிறது. திறமையான வீரர்கள் தொடர்ச்சியாக உருவாகாத நிலை, ஆர்வமின்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை இலங்கை இழந்து வருகிறது.
 நான் ஓய்வு பெற்றது முதல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளவில்லை. மூன்று முறை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற இலங்கை நிலைமை கவலை தருகிறது.
 கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. தற்போதைய தலைமுறையினர் பொருளாதார ரீதியில் வளம் பெறுவதில் கவனமாக உள்ளனர்.
 எங்கள் காலத்தில் பணம் என்பது ஒரு அளவுகோலில்லை. 90-கால கட்டத்தில் அதிக பணம் செலவழிக்கப்படவில்லை. ஒருவர் சிறப்பாக ஆடினாலே பணம், அங்கீகாரம் தானாக கிடைத்து விடும்.
 இலங்கையில் போதிய திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்கவில்லை. பயிற்சியாளர்களால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாது. அடிப்படை ஆட்டம் குறித்து அவர்கள் பயிற்சி தர முடியும். தனி நபர் ஆர்வம், முயற்சியால் தான் வெற்றி சாத்தியமாகும்.
 மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயமடைந்துள்ள நிலையில் குல்தீப் யாதவுக்கு அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பது குறித்து கூறுகையில்: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது குறித்து உங்கள் நாட்டு தேர்வுக் குழுவினர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
 இந்தியாவில் குல்தீப்-சஹல் என இரண்டு சிறந்த மணிக்கட்டில் பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். உலகக் கோப்பையில் அவர்கள் எவ்வாறு பந்துவீசுவர் என காத்திருக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்து பிட்ச்கள் ஸ்விங் பந்துவீச்சுக்கு உதவும். ஆஸி. தனது பழைய திறனை இழந்துள்ளது.
 ஆப்கன் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், நான் சந்திக்கும் முன்பே சிறந்த பந்துவீசசாளராக விளங்கி வருகிறார். அவருக்கு சில ஆலோசனைகளை அவ்வப்போது தந்து வருகிறேன் என்றார் முரளிதரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com