இறுதி டி20: இந்திய மகளிரணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி டி20 ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என இந்திய மகளிர் அணி எதிர்பார்த்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி டி20 ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என இந்திய மகளிர் அணி எதிர்பார்த்துள்ளது.
 ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற வென்ற நிலையில், பின்னர் தொடங்கிய 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது. முதல் வரிசை வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அபாரமாக ரன்களை சேர்த்து வருகின்றனர்.
 மிடில் ஆர்டர் வரிசையில் சிக்கல்
 ஆனால் மிடில் ஆர்டர் வரிசை வலுவிழந்து காணப்படுகிறது. குறிப்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், தயாளன் ஹேமலதா ஆகியோர் சரிவர ஆடவில்லை. வரும் 2020 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை கட்டமைக்க நிர்வாகம் முனைநந்துள்ளது.அதிரடி வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் கெளர் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தார்
 இதனால் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.குறுகிய ஆட்ட முறையில் அவரது ஆட்டம் சோபிக்கவில்லை என்பதால் அவர் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
 முதல் ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாம் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியுற்றது. இரு ஆட்டங்களிலும் 140 ரன்களைக் கூட தாண்டவில்லை.
 அறிமுக வீராங்கனை பிரியா புனியாவும் தனது பங்கை சரிவர ஆற்றவில்லை. தீப்தி சர்மாவின் பங்கு அணியில் என்ன என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் உள்ளது. சில வீராங்கனைகளுக்கு போதிய ஆட்ட அனுபவம் இல்லை. இளம் வீராங்கனைகளுக்கு இது கற்கும் காலம் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறினார்.
 ஆப் ஸ்பின்னர், இடதுகை பேட்டிங் வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். ஆனால் எதிலும் சோபிக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே தீப்தியின் ஆட்டம் கேள்விக்குறியாக உள்ளது. அவருக்கு பதிலாக மற்றொரு வீராங்கனையை அணி நிர்வாகம் அடையாளம் காண வேண்டும்.
 நியூஸிலாந்து அணியினர் தொடரை வென்றுள்ள நிலையில் அவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். குறிப்பாக மூத்த வீராங்கனை சூஸிபேட்ஸ் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். அதே நேரத்தில் அவர்களின் பந்துவீச்சும் சிறப்பாகவே உள்ளது.
 கடைசி டி20 ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் ஊர் திரும்ப இந்திய மகளிர் போராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
 ஆட்ட நேரம்: காலை 7.30
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com