டி20 தொடர் வெற்றி: பாகிஸ்தானின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20-யை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்கா... 
டி20 தொடர் வெற்றி: பாகிஸ்தானின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20-யை வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன்மூலம் தொடர்ச்சியாக 11 டி20 தொடர்களில் வெற்றி பெற்று வந்த பாகிஸ்தானின் வெற்றிப் பயணத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

ஜோகனாஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. ரஸ்ஸி வான் டெர் டுஸ்ஸன் 27 பந்துகளில் 45 ரன்களும் டேவிட் மில்லர் 29 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க வீரர்கள் மொத்தம் 11 சிக்ஸர் அடித்தார்கள். பாகிஸ்தான் உஸ்மான் ஷின்வாரி 4 ஓவர்களில் 63 ரன்கள் வாரிக் கொடுத்து தெ.ஆ. அணி அதிக ரன்கள் எடுக்கக் காரணமாக இருந்தார். அதேசமயம் அதற்கு முற்றிலும் எதிராக, இமாட் வாசிம் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுடன் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இவரும் மோசமாகப் பந்துவீசியிருந்தால் தென் ஆப்பிரிக்க அணி நிச்சயம் 200 ரன்களை எடுத்திருக்கும்.

மிகவும் பரபரப்பான முறையில் நடந்த ஆட்டத்தில், 7 ரன்கள் குறைவாக எடுத்துத் தோற்றது பாகிஸ்தான் அணி. தொடக்க வீரர் பாபர் அஸாம் 90 ரன்களும் ஹுசைன் தலத் 55 ரன்களும் எடுத்தாலும் கடைசிக்கட்டத்தில் அதிகமாக விக்கெட்டுகளை இழந்ததால் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது. கடைசி டி20 ஆட்டம் புதன் அன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com