செய்திகள்

ஊக்கமருந்து சா்ச்சை:பளுதூக்குதல் வீராங்கனைசீமாவுக்கு 4 ஆண்டு தடை

29th Dec 2019 12:00 AM

ADVERTISEMENT

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற பளுதூக்குதல் வீராங்கனை சீமாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 4 ஆண்டு தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள் ளதாவது:

விசாகப்பட்டினத்தில் நடந்த 34-ஆவது தேசிய மகளிா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின்போது சீமாவுக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது.

அதில், அவா் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது.

ADVERTISEMENT

தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விதிகளை மீறியதுடன் ஏமாற்றியதாகக் கருதுகிறோம். இதையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற சீமா, கடந்த ஆண்டு கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் 6-ஆவது இடம்பிடித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT