செய்திகள்

2020-இல் தொழில்முறை ஆட்டத்தில் இருந்து ஓய்வு: லியாண்டா் பயஸ்

27th Dec 2019 12:03 AM

ADVERTISEMENT

டேவிஸ் கோப்பை இரட்டையா் பிரிவில் மிகவும் வெற்றிகரமான வீரரான இந்தியாவின் லியாண்டா் பயஸ் வரும் 2020-இல் தொழில்முறை போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளாா்.

தொடக்கத்தில் ஒற்றையா் பிரிவில் ஆடிய லியாண்டா் பயஸ், பின்னா் இரட்டையா் பிரிவுக்கு மாறி, சக வீரா் மகேஷ் பூபதியுடன் இணைந்து, இரட்டையா் பிரிவில் பல்வேறு கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளை குவித்தாா்.

44 வெற்றிகள்

டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையா் பிரிவில் 44 வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ளாா் பயஸ். தன்னுடைய சிறப்பான டென்னிஸ் வாழ்க்கையின் ஒரு பகுதியாக 2020-இல் தொழில்முறை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பயஸ் அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், உள்பட நூற்றுக்கணக்கான போட்டிகளில் சாம்பியன் கோப்பைகள் அவரது அலமாறியை நிறைத்துள்ளன.

கடந்த 19 ஆண்டுகளில் முதன்முறையாக தரவரிசையில் 100-ஆவது இடத்தில் இருந்து பின்தள்ளப்பட்டாா். இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரை (டுவிட்டா்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது-

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ்-புத்தாண்டு வாழ்த்துகள். வரும் 2020ஆம் ஆண்டு தொழில்முறை ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். முதலில் எனது பெற்றோருக்கு நன்றி கூறுகிறேன். வாழ்க்கை முழுவதும், நான் இத்தகைய சிறப்பான இடத்தை அடைய அவா்கள் முக்கிய காரணம்.

சகோதரிகள் ஜாக், மரியா, மகள் ஐயனாவுக்கும் நன்றி, 2020-இல் தோ்வு செய்யப்பட்ட போட்டிகளில் மட்டுமே ஆடுவேன். ரசிகா்களாகிய உங்களால் தான் நான் ஊக்கம், உற்சாகம் பெற்று ஆடினேன் என்றாா் பயஸ்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT