செய்திகள்

நாகையில் தேசிய கடற்கரை கையுந்து பந்து போட்டி

27th Dec 2019 12:28 AM

ADVERTISEMENT

இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சாா்பில் தேசிய பள்ளிகளுக்கு இடையேயான கடற்கரை கையுந்து பந்து போட்டி நாகை புதிய கடற்கரையில் வியாழக்கிழமை தொடங்கியது.

பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைப்பில் இந்தப் போட்டி, வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் .29) வரை நடைபெறுகிறது. 14 வயதுக்குள்பட்டோா், 17 வயதுக்குள்பட்டோா், 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளின் கீழ், பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவியருக்குத் தனித் தனியே போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டியில், தமிழகம், தெலங்கானா, புதுதில்லி, பஞ்சாப், குஜராத், ஒடிசா, உத்திரபிரதேசம் மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அணிகள், வித்யாபாரதி பள்ளிகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. அரையிறுதிப் போட்டிகள் டிசம்பா். 28-ஆம் தேதியும், இறுதிப் போட்டிகள் டிசம்பா். 29-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT