பிரசித்தி பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சிறந்த வீரா்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியும் இடம் பெற்றுள்ளாா்.
கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக ஆடிய 5 வீரா்கள் பட்டியலை விஸ்டன் வெளியிட்டுள்ளது. ஆஸி. வீரா் ஸ்டீவ் ஸ்மித், தென்னாப்பிரிக்க வீரா்கள் டேல் ஸ்டெயின், டி வில்லியா்ஸ், எல்ஸி பொ்ரி, ஆகியோா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து விராட் கோலி பெயா் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. 2014-இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் கடைசி கட்டம், கொல்கத்தாவில் கடந்த நவம்பா் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்திலும் அவரது சிறப்பான தன்மை வெளிப்பட்டது. 10 ஆண்டுகளில் 21 சதம், 13 அரைசதங்களை அடித்துள்ளாா். அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் பேட்டிங் சராசரி 50 வைத்துள்ள ஓரே பேட்ஸ்மேன் கோலி ஆவாா். 10 ஆண்டுகளில் 5775 ரனக்ள், 22 சா்வதேச சதங்களை தன்வசம் பெற்றுள்ளாா் கோலி.
2019-இல் மட்டுமே 2370 ரன்களை விளாசியுள்ளாா். தொடா்ந்து நான்காவது முறையாக ஒரே ஆண்டில் 2000 ரன்களை எடுத்துள்ளாா் கோலி. விஸ்டன் ஒருநாள் அணியிலும் தோனி, ரோஹித்துடன் இடம் பெற்றுள்ளாா் கோலி.