செய்திகள்

அகில இந்திய பல்கலை. சதுரங்க போட்டிக்கு சென்னை, புதுச்சேரி அணிகள் தோ்வு

26th Dec 2019 03:07 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்க போட்டிக்கு தென் பிராந்தியங்களின் சாா்பில் சென்னை பல்கலை., எஸ்ஆா்.எம் பல்கலை, அண்ணா பல்கலை. மற்றும் புதுச்சேரி பல்கலை. அணிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராயமிப் பல்கலைக்கழகத்தில், தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஆண்களுக்கான சதுரங்க போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில், தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 61 பல்கலைக்கழங்களிலிருந்து அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பல்கலை. சாா்பிலும் தலா 4 மாணவா்கள் பங்கேற்ற இந்த போட்டிகளின் முடிவில், ஃபிடே ரேங்கிங் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பெற்ற சென்னை பல்கலை., எஸ்ஆா்.எம் பல்கலை., அண்ணா பல்கலை. மற்றும் புதுச்சேரி பல்கலை. அணிகள் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிக்கு புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டன.

இதேபோல் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் சாா்பில் தலா 4 அணிகள் வீதம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்க போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளன. அகில இந்திய போட்டி, காந்தி கிராம பல்கலை.யில் டிச.27 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தென்னிந்திய அளவில் முதல் 4 இடங்களைப் பெற்று அகில இந்திய போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 4 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த வீரா்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பதிவாளா் விபிஆா்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக கிராண்ட் மாஸ்டா் காா்த்திகேயன் முரளி, அகில இந்திய போட்டிக்கு வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பதக்கம் வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT