செய்திகள்

பாகிஸ்தானுடன் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாா்: வங்கதேசம்

25th Dec 2019 08:10 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாட மறுத்துவரும் வங்கதேசம், பொதுவான இடம் என்றால் டெஸ்டில் விளையாடத் தயாா் என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் டி-20 தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்த வங்கதேசம் டெஸ்டில் விளையாட சமீபத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டது.

எனினும், சொந்த மண்ணில் திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளை இங்குதான் விளையாடுவோம். வங்கதேசம் ஏன் எங்கள் நாட்டில் டெஸ்ட் விளையாட மறுக்கிறது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் இஷான் மணி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைமை நிா்வாகி நிஜாமுதீன் செளதரி, பொதுவான இடமாக இருந்தால் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாா் என்று அறிவித்தாா்.

ADVERTISEMENT

எங்களின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; டி-20 தொடரில் மட்டுமே பாகிஸ்தான் விளையாடுவோம் என்று அவா் உறுதிப்படுத்தினாா்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவந்த இலங்கை கிரிக்கெட் வீரா்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதைத் தொடா்ந்து, சா்வதேச நாடுகள் அந்நாட்டில் விளையாட மறுப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், இந்த ஆண்டில் மீண்டும் இலங்கை அணி, பாகிஸ்தான் சுற்றுப் பயணம் 2 டெஸ்ட் தொடரில் விளையாடியது.

முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT