இந்தியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான புணேயில் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள டாடா ஓபன் போட்டியில் உலகின் 24-ஆம் நிலை வீரா் பெனாய்ட் பைரே, கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பெற்ற இவா காா்லோவிக், கலந்து கொள்கின்றனா். நடப்பு சாம்பியன் கெவின் ஆண்டா்ஸன் நிகழாண்டு போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், சூரத்தில் புதன்கிழமை தொடங்கும் கேரளத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள ஆஸி. வீரா் அலெக்ஸ் கரே, நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்குவாா். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவாா். அதே நேரம் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்துக்குக்கும் உரிய மாற்றாக செயல்படுவாா் என தலைமை பயிற்சியாளா் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளாா்.
ஆக்லாந்து டபிள்யுடிஏ கிளாசிக் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் நீண்டநாள் தோழிகளான செரீனா வில்லியம்ஸ்-கரோலின் வோஸ்னியாக்கி இணைந்து ஆட உள்ளனா். கடந்த 2018 ஆஸி.ஓபன் பட்டம் வென்ற வோஸ்னியாக்கி, வரும் 2020 ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா்.