செய்திகள்

எல்லோரும் வரி செலுத்துகிறார்கள்: நடிகை கங்கனாவின் கருத்துக்கு பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பதிலடி!

24th Dec 2019 05:23 PM | எழில்

ADVERTISEMENT

 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தற்போது நாட்டில் நடைபெற்றும் வரும் தொடா் போராட்டங்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது: 

நம் நாட்டில் 3-4 சதவீத மக்கள் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளார்கள். எனவே பேருந்துகள், ரயில்களைக் கொளுத்தி, அமளி ஏற்படுத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது? ஒரு பேருந்தை வாங்கும் செலவு மிக அதிகம். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நம் நாட்டில் பலர் இறக்கும் அளவுக்கு நம் நாட்டின் நிலை உள்ளது. ஜனநாயகம் என்கிற பெயரில் வன்முறையை மக்கள் தூண்டிவிடக் கூடாது. சுதந்திரத்துக்கு முன்பான காலக்கட்டங்களில் தான் நாம் இன்னும் வாழ்கிறோம். அப்போது, வரி கட்டாமல் எதிர்ப்பு தெரிவிப்பது, போராட்டம் செய்வது போன்றவை ஏற்புடையதாக இருந்தன. இன்று ஜனநாயக முறையால் இத்தாலி, ஜப்பானில் இருந்து அல்ல, உங்களிடமிருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல பதிவுகளைப் பகிர்ந்து வரும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, கங்கனாவின் கருத்துக்கு மறைமுகமாகப் பதிலடி தந்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: ஒவ்வொரு இந்தியனும் வரி செலுத்துகிறார்கள் என்றார். 

Tags : Jwala Gutta
ADVERTISEMENT
ADVERTISEMENT