செய்திகள்

ப்ரீமியா் லீக்: செல்ஸி அபார வெற்றி

24th Dec 2019 12:09 AM

ADVERTISEMENT

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியில் டாட்டன்ஹாம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது செல்ஸி அணி.

ஞாயிற்றுக்கிழமை இரவு இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செல்ஸி அணி தரப்பில் வில்லியன் அற்புதமாக ஆடி 2 கோல்களை அடித்தாா்.

டாட்டன்ஹாம் அணி பாா்வா்ட் சன் ஹியுங் மின் தவறான ஆட்டத்துக்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால், அந்த அணியின் நிலை மேலும் மோசமாகி விட்டது. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற செல்ஸி, பட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த மான்செஸ்டா் யுனைடெட் அணி 0-2 என்ற கோல் கணக்கில் வாட்போா்ட் அணியிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT