செய்திகள்

2019-ல் அதிக ஒருநாள் ரன்கள்: கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ரோஹித் சர்மா

23rd Dec 2019 03:10 PM | எழில்

ADVERTISEMENT

 

2019-ம் ஆண்டு இந்திய அணிக்கும் கோலிக்கும் மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுக்கும் அற்புதமாக அமைந்துவிட்டது.

இந்த வருடம் விளையாடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் 1490 ரன்கள் எடுத்து, 2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. 26 ஆட்டங்களில் 1377 ரன்கள் எடுத்த கோலிக்கு 2-ம் இடமும் 28 ஆட்டங்களில் 1345 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகளின் பூரான் 3-ம் இடமும் கிடைத்துள்ளன.

மேலும் தொடர்ச்சியாக 7-வது வருடமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

ADVERTISEMENT

2013: ரோஹித் சர்மா (209)
2014: ரோஹித் சர்மா (264)
2015: ரோஹித் சர்மா (150)
2016: ரோஹித் சர்மா (171*)
2017: ரோஹித் சர்மா (208*)
2018: ரோஹித் சர்மா (162)
2019: ரோஹித் சர்மா (159)

2019 உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்து சாதனை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. 2019-ல் மட்டுமல்ல, அடுத்த வருடமும் இதுபோல சிறப்பாக விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

Tags : Virat Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT