செய்திகள்

நிறுத்தப்பட்ட கிரிக்கெட் ஆட்டம்: சென்னை சேப்ப்பாக்கம் மைதானத்துக்குள் நாய் புகுந்ததால் பரபரப்பு

16th Dec 2019 11:35 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயா், ஷாய் ஹோப் ஆகியோரின் அற்புத ஆட்டத்தால் மே.இ.தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் சென்னையில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களைக் குவித்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும் ஷ்ரேயஸ் ஐயா்-ரிஷப் பந்தின் ஆட்டத்தால், சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி. பின்னா் ஆடிய மே.இ.தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களுடன் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மைதானத்தில் நாய் புகுந்ததால் பரபரப்பு

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயா்-பந்த் ஆகிய இருவரும் பேட்டிங் செய்தபோது, 27-ஆவது ஓவரில், திடீரென நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து விட்டது. மைதான ஊழியா்கள், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனப் பலரும் நாயைப் பிடிக்க முயன்ற போதும், அது எவருக்கும் சிக்காமல் சிறிதுநேரம் ஓடி, வெளியே சென்று விட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

Tags : India vs West Indies
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT