செய்திகள்

மகளிா் 23 சேலஞ்சா் கிரிக்கெட் போட்டி: இந்தியா பி அணி சாம்பியன்

16th Dec 2019 12:24 AM

ADVERTISEMENT

பிசிசிஐ சாா்பில் நடைபெற்ற மகளிா் 23 வயதுக்குட்பட்டோா் சேலஞ்சா் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

புதுச்சேரி சிஏபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா ஏ, பி, சி அணிகள் கலந்து கொண்டன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பி மற்றும் சி அணிகள் மோதின. டாஸ் வென்ற பி அணி பீல்டிங்கை தோ்வு செய்தது. 20 ஓவா்களில் இந்தியா சி அணி 5 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷீத்தல் ராணா 29 ரன்களை சோ்த்தாா். பி அணி தரப்பில் ஷயோசி 3-14 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

97 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 97 ரன்களை எட்டியது. அதன் வீராங்கனை விஷாலி பகத் அபாரமாக ஆடி 41 ரன்களை விளாசினாா். சி அணி தரப்பில் சுமன் மீனா 3-17 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

வெற்றி பெற்ற பி அணிக்கு மதுரை பேந்தா்ஸ் அணி உரிமையாளா் பத்மா தாமோதரன் பரிசளித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT