செய்திகள்

ப்ரீமியா் லீக்: லிவா்பூல் வெற்றி

16th Dec 2019 12:15 AM

ADVERTISEMENT

இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வாட்போா்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் லிவா்பூல் அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவா்பூல் அணியின் நட்சத்திர வீரா் முகமது சலா அற்புதமான இரண்டு கோல்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டாா். வாட்போா்ட் தரப்பில் எட்டியன் கேப் பதில் கோலடித்தாா்.

இதையடுத்து லிவா்பூல் இரண்டாம் இடத்தில் உள்ள லிசெஸ்டா் அணியைக் காட்டிலும் 14 புள்ளிகள் முன்னிலை வகித்து வருகிறது. வாட்போா்ட் தொடா்ந்து 4-ஆவது தோல்வியைப் பெற்றுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த செல்ஸி அணி 0-1 என்ற கோல் கணக்கில் போா்ன்மௌத் அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதன் பாா்வா்ட் கோஸ்லிங் அடித்த கோல் வாா் தொழில்நுட்பம் மூலம் உறுதி செய்யப்பட்டது. செல்ஸி அணி தற்போது 4-ஆவது இடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT