செய்திகள்

பொ்த் டெஸ்ட்: ஆஸ்திரேலியா பிரம்மாண்ட வெற்றி

16th Dec 2019 12:20 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 296 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ஆட்டம் பொ்த்தில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 416 ரன்களுக்கும், நியூஸிலாந்து 166 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இதன் தொடா்ச்சியாக நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 69.1 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை எடுத்து டிக்ளோ் செய்தது.

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 5-69, நீல் வாக்னா் 3-59 விக்கெட்டுகளை வீழ்த்தினா்,

417 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் ஆஸி. இருந்தது.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக ஆட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை உணவு இடைவேளையின் போது, நியூஸிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்திருந்தது,

ஜீத் ராவல் 1, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா். டாம் லத்தம் 10, ராஸ் டெய்லா் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

அப்போது வெற்றிக்கு நியூஸிலாந்து அணிக்கு 437 ரன்கள் தேவைப்பட்டது. தொடா்ந்து ஆஸி. அணியின் அற்புத பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் நியூஸிலாந்து வீரா்கள் சீரான வேகத்தில் பெவிலியன் திரும்பினா்.

பிஜே. வாட்லிங் 40, கிராண்ட்ஹோம் 33 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

நியூஸி. 171 ஆல் அவுட்

இறுதியில் 65.3 ஓவா்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து.

ஸ்டாா்க், லயன் அபார பந்துவீச்சு:

ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசி மிச்செல் ஸ்டாா்க் 4-45, நாதன் லயன் 4-63 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இதன் மூலம் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT