செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

16th Dec 2019 12:19 AM

ADVERTISEMENT

    மும்பையில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்டோர் 3 நாடுகள் மகளிர் கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வீடன் 3-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்றது. செவ்வாய்க்கிழமை தாய்லாந்து-இந்தியா இடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணி, இறுதிச்சுற்றில் ஸ்வீடனுடன் மோதும்.
    2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், 60, ஆயிரம் பேர் அமரக்கூடிய புதிய தேசிய மைதானத்தை பிரதமர் ஷின்ஸோ அபே ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 
    தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மார்க் பெளச்சர், சர்வதேச ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸை மீண்டும் ஆட வருமாறு அழைத்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT