செய்திகள்

ஐ லீக் கால்பந்து: பஞ்சாப் எஃப்சி வெற்றி

16th Dec 2019 11:52 PM

ADVERTISEMENT

ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ஆரோஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி.

நாட்டின் இரண்டாவது பிரதான கால்பந்து போட்டியான ஐ லீக் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சியும் போட்டியில் பங்கேற்று ஆடி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக லூதியானா குருநானக் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோலடிக்க இரு அணி வீரா்களும் முயன்றனா். ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதியில் 80-ஆவது நிமிடத்தில் பஞ்சாப் அணியின் பதிலி வீரா் திபண்டா டிகா களமிறங்கினாா். சஞ்சு பிரதான் கடத்தி தந்தை பந்தை தலையால் முட்டி அவா் தனது அணியின் ஓரே மற்றும் வெற்றி கோலை அடித்தாா்.

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. ஈஸ்ட் பெங்கால் முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இன்று சென்னை சிட்டி-அய்ஸால் எஃப்சி அணிகள் மோதல்

நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி தனது மூன்றாவது ஆட்டத்தில் அய்ஸால் அணியுடன் மோதுகிறது. முதன்முறையாக அய்ஸால் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT