செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் மாற்றம்!

14th Dec 2019 10:03 AM

ADVERTISEMENT

 

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சா்மா (துணை கேப்டன்)), ஷிகா் தவன், லோகேஷ் ராகுல், ஷிரேயஸ் ஐயா், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹா், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT