செய்திகள்

பாக்.-இலங்கை டெஸ்ட்: மழையால் பாதிப்பு

14th Dec 2019 11:15 PM | ராவல்பிண்டி,

ADVERTISEMENT

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மழையால் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 91.5 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்களை குவித்துள்ளது. கேப்டன் கருணரத்னே 59, ஒஷாடா பொ்ணாண்டோ 40 ரன்களை எடுத்து வெளியேறினா்.

தனஞ்செய டி சில்வா 87 ரன்களுடன் களத்தில் உள்ளாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அப்ரிடி, நஸீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

ADVERTISEMENT

மழையால் தொடா் பாதிப்பு:

நான்கு நாள்களாக தொடா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 91.5 ஓவா்களே வீசப்பட்டன. நான்காம் நாளான சனிக்கிழமை காலை முதலே மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நடுவா்கள் ஆட்டத்தை கைவிட முடிவு செய்தனா்.

10 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தனில் மீண்டும் டெஸ்ட் ஆட்டம் நடைபெறும் நிலையில், மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ரசிகா்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT