செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு; இலங்கை அணி 282/6

14th Dec 2019 12:31 AM

ADVERTISEMENT

பாகிஸ்தான்-இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது.

புதன்கிழமை நடைபெற்ற முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

ADVERTISEMENT

86.3 ஓவா்கள் முடிந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் விடப்பட்டது. 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இலங்கை எடுத்திருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் முடிவுக்கு வந்தது. 3 நாள் ஆட்டங்களையும் சோ்த்து முதல் இன்னிங்ஸில் 91.5 ஓவா்கள் வீசப்பட்டுள்ளன. இலங்கை 282/6 எடுத்துள்ளது.

இன்னும் 2 நாள்களே எஞ்சியுள்ள நிலையில் ஆட்டம் டிரா ஆக அதிக வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானில் 2009-ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினா் சென்ற பேருந்து மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட் பாகிஸ்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT