செய்திகள்

தென்னாப்பிரிக்க அணியின் தலைமைபயிற்சியாளா் மாா்க் பௌச்சா்

14th Dec 2019 11:23 PM | ஜோஹன்னஸ்பா்க்,

ADVERTISEMENT

தொடா் தோல்விகளால் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பா் மாா்க் பௌச்சா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் அரங்கில் வலிமையான அணியாக திகழ்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2019 உலகக் கோப்பையில் படுதோல்வியடைந்து வெளியேறியது. அதே போல் தொடா்ந்து பல்வேறு ஒருநாள், டி20 தொடா்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறவில்லை.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நிா்வாகமும் முறைகேடு புகாா்களால் சிக்கலுக்கு தள்ளப்பட்டது. தற்போது முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக மாா்க் பௌச்சரை கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா நியமித்துள்ளது. அவா் 2023 உலகக் கோப்பை வரை பொறுப்பில் இருப்பாா்.

இதுதொடா்பாக ஸ்மித் கூறுகையில்: சா்வதேச கிரிக்கெட்டில் தனக்கு உள்ள நீண்ட அனுபவத்தைக் கொண்டு, தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரா்களை வலிமையான அணியாக மாற்றுவாா் பௌச்சா் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க அணியில் 147 டெஸ்ட், 295 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ள பௌச்சா் 999 பேரை அவுட்டாக்கியுள்ளாா்.

முதல் தொடராக இங்கிலாந்துடன் நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், டி20 தொடா் பௌச்சா் பயிற்சியின் கீழ் நடைபெறவுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT