செய்திகள்

ரஞ்சி: தினேஷ் கார்த்திக் சதமடித்தும் முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய தமிழக அணி!

11th Dec 2019 02:37 PM | எழில்

ADVERTISEMENT

 

ரஞ்சி கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி, 29 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற கர்நாடக அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. 2-ம் நாள் முடிவில் தமிழக அணி, 58 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடின. கடைசியில், தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 109.3 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தினேஷ் கார்த்திக் கடைசி வரை போராடி 113 ரன்கள் எடுத்தார். பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடாததால் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் பின்தங்கியுள்ளது. கர்நாடக அணித் தரப்பில் கே. கெளதம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT