செய்திகள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமனம்!

11th Dec 2019 05:27 PM | எழில்

ADVERTISEMENT

 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அஸ்கர் ஆப்கன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கன், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக குல்பாதின் நைப் ஒருநாள் கேப்டன் ஆனார். 

31 வயது அஸ்கர் ஆப்கன் கடந்த நான்கு வருடங்களாக ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக மூன்று புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஒருநாள் அணிக்கு குல்பாதின் நைப், டெஸ்ட் அணிக்கு ரஹ்மத் ஷா, டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டன்களாக நியமிக்கப்பட்டார்கள். மூன்று கேப்டன்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ADVERTISEMENT

ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து ஆட்டங்களிலும் தோற்றதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், அஸ்கர் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளுக்கு கேப்டனாக அவர் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்கர் ஆப்கன் இதுவரை விளையாடிய 181 சர்வதேச ஆட்டங்களில், 104 ஆட்டங்களில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். 

Tags : Asghar Afghan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT