செய்திகள்

தவனுக்குக் காயம்: ஒருநாள் அணியிலும் இடம்பெறவுள்ள மயங்க் அகர்வால்!

11th Dec 2019 12:44 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது.

இந்தத் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் ஷிகர் தவன், இன்னமும் காயத்திலிருந்து மீண்டு வரவில்லை. இதையடுத்து தவனுக்குப் பதிலாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் போது தவனுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றார். 

இந்திய டெஸ்ட் அணி வீரரான மயங்க் அகர்வால், தற்போது தமிழகத்துக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்குத் தேர்வானால், கர்நாடகாவின் 2-வது ரஞ்சி ஆட்டத்தில் அகர்வால் இடம்பெற மாட்டார். இதற்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின்போது விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டதால் இந்திய அணியில் இடம் பிடித்தார் மயங்க் அகர்வால். இதையடுத்து 2-வது முறையாக இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெறவுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT