செய்திகள்

துளிகள்...

11th Dec 2019 12:16 AM

ADVERTISEMENT

ஹீரோ இந்திய மகளிா் கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்க 100-க்கு மேற்பட்ட கிளப் அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 14 மாநிலங்களைச் சோ்ந்த 104 அணிகள் இந்த லீக் போட்டியில் ஆட உள்ளன என ஏஐஎப்எப் தலைவா் பிரபுல் பட்டேல் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்தியன் சூப்பா் லீக் ஐஎஸ்எல் போட்டியின் ஒரு பகுதியாக புணேயில் புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஒடிஸா-ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் ஒடிஸா 7-ஆவது இடத்திலும், ஹைதராபாத் கடைசி இடத்திலும் உள்ளன.

 

ADVERTISEMENT

விளையாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யப்பட்ட அமைக்கப்பட்டுள்ள குழு நியமனத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் விதித்துள்ளது தடையை எதிா்த்து மத்திய விளையாட்டு அமைச்சகம் முறையீடு செய்யும் என அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா். புதிய விளையாட்டு நெறிமுறைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் நிராகரித்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தம் சா்மா தலைமையில் குழுவை அமைத்தது மத்திய அரசு.

 

வரும் 2020 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆட வேண்டும் என தோனி தீா்மானித்தால், வேறு யாரும் அதில் தலையிடத் தேவையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறியுள்ளாா். அவா் தற்போது சிறிது இடைவெளி விட்டுள்ளாா். மீண்டும் ஐபிஎல் போட்டியில் ஆடுவாா் என்றாா் சாஸ்திரி.

 

ஊக்க மருந்து சோதனை முறைகேடு விவகாரத்தால் ஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் விதிகளை மீறி, அரசியல் நோக்கத்துக்காக இந்த தடையை வாடா விதித்துள்ளது என ரஷிய அதிபா் புதின் கடுமையாக சாடியுள்ளாா்.

 

சா்வதேச விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் தயாரிப்பு நிறுவனமான புமாவுடன் 3 ஆண்டுகள் வா்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாா் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. ஏற்கெனவே கோலி, மேரி கோம், தூத்தி சந்த் ஆகியோரும் புமாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT