செய்திகள்

மும்பை ரஞ்சி அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, பிருத்வி ஷா!

3rd Dec 2019 05:36 PM | எழில்

ADVERTISEMENT

 

பரோடாவுக்கு எதிராக விளையாடவுள்ள மும்பை ரஞ்சி அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, தொடக்க வீரர் பிருத்வி ஷா போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். 41 தடவை ரஞ்சிப் போட்டியை வென்றுள்ள மும்பை அணி, டிசம்பர் 9 அன்று பரோடாவுக்கு எதிராகத் தனது முதல் ரஞ்சி ஆட்டத்தை விளையாடவுள்ளது. மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் ஆதித்ய தரே துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளார்கள். 

கடந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிருத்வி ஷா. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.  இதன்பிறகு, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகார் தொடர்பாக பிருத்வி ஷாவுக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் பிருத்வி ஷாவால் இடம்பெற முடியவில்லை. இதையடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் நன்கு விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் பிருத்வி ஷா.

ADVERTISEMENT

மும்பை அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஆதித்ய தரே (துணை கேப்டன்), ரஹானே, பிருத்வி ஷா, ஜே பிஷ்டா, ஷுபம் ரஞ்சனே, ஆகாஷ் பார்கர், சர்ஃபராஷ் கான், ஷாம்ஸ் முலானி, வினாயக் போயிர், ஷஷாங் அட்டார்டே, ஷர்துல் தாக்குர், துஷார் தேஷ்பாண்டே, தவால் குல்கர்னி, ஏக்நாத் கேர்கர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT