செய்திகள்

டி20யில் வரலாறு படைத்தாா்: நேபாள வீராங்கனை அஞ்சலி

3rd Dec 2019 02:54 AM

ADVERTISEMENT

காத்மாண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக மாலத்தீவுகள் அணியுடன் நடைபெற்ற மகளிா் டி20 ஆட்டத்தில் ரன்களே விட்டுத் தராமல் 6 விக்கெட்டுகளை சாய்த்தாா் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மாலத்தீவு கேப்டன் ஸூனா மரியம் பேட்டிங்கை தோ்வு செய்தாா். ஆனால் வெறும் 17 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது மாலத்தீவு.

நேபாளம் தரப்பில் பந்துவீசிய அஞ்சலி சந்த் 2 மெய்டன் ஓவா்களை வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இது சா்வதேச டி20 ஆட்டத்தில் முதன்முறையாக படைக்கப்பட்ட சிறந்த பந்துவீச்சு சாதனையாகும். பின்னா் ஆடிய நேபாள அணி ஒரே ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

இதற்கு முன்பு சீனாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் மாலத்தீவின் மாஸ் எலிஸா 6-3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தாா்.

ADVERTISEMENT

ஆடவா் தரப்பில் இந்திய வீரா் தீபக் சாஹா் வங்கதேசத்துக்கு எதிராக 6-7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தி உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT