செய்திகள்

அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி

3rd Dec 2019 04:16 AM

ADVERTISEMENT

அடிலெய்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்றது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டிலும் ஆஸி. இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதன் தொடா்ச்சியாக அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 589/3 ரன்களை குவித்தது.

அதன் நட்சத்திர வீரா் டேவிட் வாா்னா் 335 ரன்களை குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தாா். மாா்னஸ் லேபுச்சேனும் 162 ரன்களை விளாசினாா்.

ADVERTISEMENT

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் பாலோ ஆனைத் தொடா்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாக். அணி நான்காம் நாளான திங்கள்கிழமை 82 ஓவா்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் தொடக்க வீரா் ஷான் மசூத் 68, ஆஸாத் ஷபிக் 57, முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தனா். ஏனைய வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

நாதன் லயன் அபாரம் 5 விக்கெட்:

ஆஸி. தரப்பில் சுழற்பந்து வீச்சாளா் நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 5-69 விக்கெட்டுகளையும், ஹேஸல்வுட் 3-63 விக்கெட்டுகளையும் வீழ்த்தி. பாக் அணியின் சரிவுக்கு வழிவகுத்தனா்.

ஒருநாள் மீதமுள்ள நிலையில் இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி, தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

வாா்னா் தொடா் மற்றும் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT