செய்திகள்

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை: இந்தியாவின் அபிஷேக் வர்மாவுக்குத் தங்கம்

30th Aug 2019 01:08 PM | எழில்

ADVERTISEMENT

 

துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு நான்காவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் இப்போட்டியில், ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் அபிஷேக் வர்மா. இறுதிச் சுற்றில் 244.2 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் அபிஷேக். இந்தியாவின் செளரப் செளத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். 

இது, இந்த வருடத்தில் ஐஸ்எஸ்எஃப் உலகக் கோப்பைப் போட்டிகளில் செளத்ரி பெறும் 6-வது பதக்கமாகும். இதற்கு முந்தைய ஐந்து தடவையும் அவர் தங்கம் வென்றிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT