செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடர்: இந்திய அணியில் மீண்டும் பாண்டியா

29th Aug 2019 10:33 PM

ADVERTISEMENT


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் அடங்கிய டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க இந்தியா வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான டி20 தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இடம்பெறாத ஹார்திக் பாண்டியா தற்போது மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உலகக் கோப்பைக்குப் பிறகு, ராணுவத்தில் இணைந்து பணிபுரியவுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்க மாட்டேன் என்று தோனி பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஸ்பிரீத் பூம்ரா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்திய அணி:

ADVERTISEMENT

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி

மேலும் படிக்க: இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: டி காக் கேப்டன்

ADVERTISEMENT
ADVERTISEMENT